உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் பெண் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-10 15:55 IST   |   Update On 2023-08-10 15:55:00 IST
  • மணிப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
  • திருப்பூர் மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

திருப்பூர்:

மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, திருப்பூர் மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் பங்கேற்று மணிப்பூர் கலவரத்தில் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் , அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News