உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஓடும் பஸ்சில் தகராறு - 6 பேர் மீது வழக்கு

Published On 2023-03-27 11:08 GMT   |   Update On 2023-03-27 11:08 GMT
  • சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.
  • வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார்.

வெள்ளகோவில் :

கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்த நாச்சி முத்து மகன் சத்தியமூ ர்த்தி (வயது 42). இவர் திருப்பூர் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகின்றார். சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது வாழைப்பழம்கொண்டு வந்துள்ளார். வாழைப்பழத்தை பரமத்தியில் ஏறும்போது பின் சீட்டு வழியாக ஏறி பஸ்சில் வைத்துவிட்டு சத்தியமூர்த்தி முன்னாள் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது பஸ் கண்டக்டர் மணி மாறன் இந்த வாழைப்பழம் யாருடையது ,லக்கேஜ் வாங்க வேண்டும் என்று கேட்டு ள்ளார். இது தொடர்பாக சத்தியமூ ர்த்திக்கும், கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சத்தியமூர்த்தி என்னுடையது தான் என்று கூறவில்லை.

உடனே கண்டக்டர்மணிமாறன் வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார். பின்னர் சத்தி யமூர்த்தி வெள்ளகோவிலில் இறங்கும் போது வாழை ப்பழத்தை காணவில்லை என கண்டக்டர் மணிமா றனிடம் கேட்டபோது, சத்தியமூர்த்திக்கும் மற்றும் கண்டக்டர் மணிமாறன், பஸ்சில் பயணம் செய்த கோவை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் பஸ்சில் தகராறு செய்ததாக கூறப்படும் பஸ் பயணிகள் கோவை சதீஷ்குமார் ,கிணத்துக்கடவு வெங்கடாஜலபதி , கோவை ராமச்சந்திரன், கிணத்துக்கடவு கோபால், கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை ராஜேஷ் ,கோவை மாணிக்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News