உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் சார்பில் போதை தடுப்பு-சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-07-08 11:01 GMT   |   Update On 2022-07-08 11:01 GMT
  • வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
  • பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் போதை தடுப்பு மற்றும் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றும், விழிப்புணர்வு பற்றிய முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார். தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வாகனங்களில் செல்லும் போது சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே தலை கவசத்தை மறக்காமல் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் நிச்சயம் அணிய வேண்டும். ஒரு வழி பாதையில் செல்லக் கூடாது . போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம்.அவற்றால் எண்ணற்ற நோய்கள் பரவுகிறது. குடும்ப நிம்மதியை இழக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

தெற்கு காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். பிறகு மாணவ செயலர்கள் ரத்தினகணேஷ், அருள்குமார், பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு நடனமும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடனமும் அரங்கேற்றினர்.மாணவ மாணவிகள், பொதுமக்கள் , காவல் துறையினர் அனைவரும் இணைந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வினை ஏராளமான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News