உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-ந் தேதி நடக்கிறது

Published On 2023-06-20 11:05 GMT   |   Update On 2023-06-20 11:05 GMT
  • தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
  • குறைகளை விண்ணப்பம் வாயிலாக முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் :

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 20-ல் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் 2.30 மணியளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக (இரட்டைப் பிரதிகளில்) முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி மையம், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், டெக்ஸ்கோ உதவி மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயிற்சிகள் மற்றும் உதவிகள் போன்றவை பற்றி சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News