உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
ஊதியூா் அருகே 'கள்' விற்றவர் கைது
- ‘கள்’ விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
- 5 லிட்டா் ‘கள்ளை’ பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த மண் கலயங்களையும் அழித்தனா்.
காங்கயம் :
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே உள்ள சடையபாளையம் பகுதியில் 'கள்' விற்பனை செய்யப்படுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனா்.
அப்போது அங்கு கள் விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது.அங்கிருந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவா் சடையபாளையம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி (வயது57) என்பதும், கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து ஈஸ்வரமூா்த்தியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 5 லிட்டா் 'கள்ளை' பறிமுதல் செய்ததுடன், மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் இறக்கப்பயன்படும் மண் கலயங்களையும் அழித்தனா்.