வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்த காட்சி.
குடிபோதையில் பஸ் மீது கற்களை எறிய முயன்ற வாலிபரால் பரபரப்பு
- நொச்சிப்பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.
- உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் நொச்சிப் பாளையம் பிரிவில் இருபுறமும் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இப்பகுதியில் இரவு மது போதையில் வந்த இளைஞர் ஒருவர் உடுமலையிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மீது கல்லெறிய முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பொதுமக்களின் உதவியோடு மது போதையில் இருந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து, வீரபாண்டி பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நொச்சிபாளையம் பிரிவில் திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் இரு புறமும் அரசு மதுபான கடைகள் இயங்குவதே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.