உள்ளூர் செய்திகள்

தொரப்பள்ளி-கூடலூர் ரோட்டில் சாலையை கடந்த யானைகள் கூட்டம்

Published On 2025-06-22 16:22 IST   |   Update On 2025-06-22 16:22:00 IST
  • யானைகள் தொரப்பள்ளி-கூடலூர் சாலைக்கு வந்தன.
  • போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் சமவெளிப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் மேற்குதொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் 3 யானைகள் தொரப்பள்ளி–-கூடலூர் சாலைக்கு வந்தன.

இதனை முன்கூட்டியே கண்டறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் ரோட்டை கடப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.

தொடர்ந்து தொரப்பள்ளி–-கூடலூர் ரோட்டில் 3 யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சாலையை கடந்து வனத்துக்குள் சென்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காடுகளை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மற்றும் சாலையை கடப்பது இயல்பானவை.

ஆனால் காட்டு யானைகள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News