உள்ளூர் செய்திகள்

நரித்தோல், பற்களை தாயத்து செய்து விற்ற முதியவர் கைது

Published On 2023-11-29 09:10 GMT   |   Update On 2023-11-29 09:10 GMT
  • போலீசார் விசாரணை
  • வேலூர் ஜெயிலில் அடைத்தனர்

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, திருவண்ணா மலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் கடந்த 26, 27-ந் தேதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

இதேபோல், திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நரித்தோல் மற்றும் பற்களை வைத்து தாயத்து செய்து விற்பனை செய்யும் பணியில் நரிக்குறவர் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லா லுவுக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தாயத்து செய்து விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், பெரம்பலூர் மாவட்டம் வெப்பம்தட்டு வட்டம் எறையூர் கிராமம் காமராஜர் பகுதியை சேர்ந்த டாம்கார் (வயது 56) என்பது தெரியவந்தது.

மேலும் வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட நரிகளின் தோல் மற்றும் பற்களை கொண்டு தாயத்து செய்து விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.

இது குறித்து வனத்துறையினர் டாம்கார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News