உள்ளூர் செய்திகள்
கடலூரில் திண்ணையில் கழற்றி வைத்த தங்க செயினை திருடி சென்ற வாலிபர்கள்
- கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார்.
- திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது46). இவரது மகள் மோகனப்பிரியா. சம்பவத்தன்று தனது கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார். அப்போது கோழி பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திண்ணையில் இருந்த தங்க செயினை திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.