உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தீக்குளித்து சாவு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார் கைது விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

Published On 2023-08-07 13:16 IST   |   Update On 2023-08-07 13:16:00 IST
  • சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
  • விமல் தான் லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடு த்–து ள்–ளார்.

விழுப்புரம்:

விக்கரவாண்டி தாலுகா நாரங்கசிங்கனூரை சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 4-ந்தேதி லட்சுமியின் சேலையில் தீப்பற்றி பலத்த தீக்காய மடைந்தார். இவரை அப்ப குதியில் உள்ளவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் தீ விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லட்சுமியின் உடல் நேற்று மாலை நாரங்கசி ங்கனூருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு வந்த லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அவர்கள் திடீரென விழுப்புரம் - செஞ்சி சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கஞ்சனூர் போலீசார், லட்சுமியின் உறவினர்களிடம் பேச்சுவா ர்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், லட்சுமி இறப்புக்கு அவரது கணவரின் தம்பி விமல்தான் காரணம். சென்னையில் சினிமா படக்குழுவில் வேலை பார்த்து வரும் அவர் தனது அண்ணன் மனைவியான லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடு த்து ள்ளார். அதனால் தான் லட்சுமி தீக்குளித்து இறந்தார். எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்–மையான குற்றவாளியை கைது செய்திட வேண்டும் என்று தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதனைத் தொடர்ந்து கஞ்சனூர் போலீசார் வினோத்தின் தம்பி விமலை இன்று அதிகாலை கைது செய்தனர். கஞ்சனூர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News