உள்ளூர் செய்திகள்

முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடக்கம்

Published On 2022-06-25 10:15 GMT   |   Update On 2022-06-25 10:15 GMT
  • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடங்கவுள்ளது.
  • ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

ஆத்தூர்:

ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், வனப் பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளை பார்வையிடவும், ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

மூங்கில் குடில் விடுதிகள்

மேலும் அங்கு தங்கி பார்வையிட, சூழல் சுற்றுலா திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட விடுதிகள் உள்ளன. மோட்டார் படகு பழுதானதால் 3 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படகை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் முட்டல் ஏரி அழகை ரசிக்க, ரூ. 7 லட்சம் ரூபாயில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் மேற்கூரை கொண்ட விசைப்படகு, புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இந்த விசைப்படகு ஜுலை மாதத்தில் இயக்கப்பட உள்ளது.

விசைப்படகில் என்ஜின் பொருத்தப்பட்டு அவை நிறுத்தப்படும் இடங்கள் தயார் செய்த பின் அதனை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முட்டல் ஏரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News