உள்ளூர் செய்திகள்
- காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சோதனை செய்த போது அவர் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் பெயர் அன்பரசன் (24) கதவணை பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.