உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்டு வரும் பழைய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும்- மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

Published On 2023-07-29 14:20 IST   |   Update On 2023-07-29 14:20:00 IST
  • தூத்துக்குடி மாநகராட்சி அளவிலான காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் மாசு கட்டுபாடு வாரியம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத்துறை, மாநகராட்சி மற்றும் தேசிய தூய்மை காற்று திட்டம் ஆகியோர் இணைந்து நடத்திய தூத்துக்குடி மாநகராட்சி அளவிலான காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதில் கமிஷனர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா, துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மாநகராட்சி சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தற்பொழுது நடைபெற்று வரும் பணிகளானது நிறைவடையும் நிலையில் இருப்பதால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திறக்கப்படும் என்று கூறினார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News