உள்ளூர் செய்திகள்

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

கடலூர் சிப்காட் வளாகத்தில் மருந்து தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Published On 2023-10-18 09:05 GMT   |   Update On 2023-10-18 09:05 GMT
  • வருமான வரியை கட்டவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
  • வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்:

சென்னை ேவப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம், பூங்கா நகரில் உள்ள இன்னொரு நிறுவனம் மற்றும் மாதவரம் பூங்காநகர் ஆகிய இடங்களில் உள்ள மேலும் 2 தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை குறிவைத்து வருமான வரித்துைற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இரும்பு பொருட்கள் மற்றும் மருந்து ரசாயனம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்யும் இந்த 4 நிறுவனங்களிலும் முறை யாக வருமான வரியை கட்ட வில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்கு மாடி வணிக வளாகம் ஒன்றில் 5-வது மாடியில செயல்பட்டு வரும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை யில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றுள்ளது. இதுபோன்று சவுகார் பேட்டையில் உள்ள வணிக வளாகத்திலும், மாதவரம் நடராஜன் சாலையில் உள்ள குடோன் மற்றும் அலுவலகத் திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். சவுகார் பேட்டை பகுதியில் மட்டும் மொத்தம் 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலை கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். கடலூர் குடிகாடு பகுதியில் சிப்காட்டில் உள்ள இந்த மருந்து தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் அதிரடி இன்று காலையில் வந்தனர். தொழிற்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் அங்குள்ள அலுவலகம் மற்றும் தொழிற்சாலை மற்றும் ஸ்டோர் ரூம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவில் தான் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றபட்டதா என்பது தெரிய வரும். தனியார் மருந்து கம்பெனியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் கடலூர் சிப்காட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News