உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே வீடு புகுந்து வாலிபரை தாக்கிய கும்பல்
- அந்தோணிராஜ் என்பவருக்கும், மாறனுக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
- மாறனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள வடக்கு அப்பர்குளத்தை சேர்ந்த சக்தி சேகர் மகன் மாறன் (வயது 30). இவருக்கும், புதூரை சேர்ந்த அந்தோணிராஜ் (42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்று அந்தோணிராஜ், அவரது உறவினர் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் (25) மற்றும் 4 பேர் ஒரு காரில் வடக்கு அப்பர்குளத்திற்கு வந்து, மாறன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் மாறனை கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக அந்தோணிராஜ், மகாதேவன் உள்ளிட்ட கும்பலை தேடி வருகின்றனர்.