உள்ளூர் செய்திகள்
மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை செய்த காட்சி.
கடலூரில் கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய 6 சிறுவர்கள் விவகாரம்மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை
- கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர்.
- இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையி
கடலூர்:
கடலூர் சாவடியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர். இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று காலை கடலூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் வருகை தந்தார். பின்னர் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து விசாரணை செய்தார்.
மேலும் தப்பித்து சென்று பிடிபட்ட சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.