ஆவின் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்திய காட்சி.
அகவிலைப்படி உயர்வு கேட்டு நெல்லையில் ஆவின் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
- அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
- வருகிற 4-ந் தேதி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று இம்மானுவேல் கூறினார்.
நெல்லை:
ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி இன்று நெல்லை ரெட்டியார்பட்டி யில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். போராட்டத்திற்கு விற்பனை பிரிவை சார்ந்த இம்மானுவேல் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
பெரும்பாலான துறை களை சார்ந்த அரசு ஊழி யர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் எங்களுக்கு வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக பொங்க லுக்கு முன்னதாக அடை யாள போராட்டம் நடத்தி னோம். ஆனால் எங்களுக்கு அகவிலைப்படி வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அகவிலைப்படி உயர்வு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 4-ந் தேதி நெல்லை பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் ரெட்டியார் பட்டி ஆவின் வாயில் முன்பு ஒருநாள் அடையாள உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.