உள்ளூர் செய்திகள்
- சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
- இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாயக்கம்பட்டி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அகதிகள் முகாமில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதே முகாமை சேர்ந்த சிவராஜா என்பவரது மகன் செந்தூரன்(வயது 21) கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.