உள்ளூர் செய்திகள்

ஓசூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Published On 2022-08-09 15:50 IST   |   Update On 2022-08-09 15:50:00 IST
  • கையில் பையுடன் நின்றிருந்த சபியுல் இஸ்லாம் (23) என்பவரை மடக்கி பிடித்து கைதுசெய்தனர்.
  • ரூ. 20,000 மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

ஓசூரில் நேற்று மாலை சின்ன எலசகிரி பக்கமுள்ள காமராஜ்நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் பையுடன் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றுவதாக ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கையில் பையுடன் நின்றிருந்த சபியுல் இஸ்லாம் (23) என்பவரை மடக்கி பிடித்து சோதனையிட்டு, அவரிடமிருந்து ரூ. 20,000 மதிப்பிலான ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர் தற்போது சின்ன எலசகிரி பகுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும், இவர் விற்பனைக்காக பெங்களூர் அருகே சந்தாபுராவிலிருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News