உள்ளூர் செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் ஆட்டோவை திருடி சென்ற வாலிபர் கைது
- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீ கடைக்குச் சென்றுள்ளார்.
- ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
ராயபுரம்:
திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்தவர் ராஜா (வயது 30) ஆட்டோ டிரைவர். கடந்த 7-ந் தேதி அன்று புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஆட்டோவை நிறுத்திவிட்டு டீ கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர் சாவியுடன் இருந்த ஆட்டோவை திருடிக் கொண்டு தப்பித்து சென்றார். இது பற்றி ராஜா புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு தேடி வந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா (27) என்பவர் ஆட்டோவை திருடி சென்றது தெரியவந்தது.
பின்னர் ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.