உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

Published On 2023-06-14 10:50 IST   |   Update On 2023-06-14 10:50:00 IST
  • கைது தொடர்பாக குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை.
  • சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை.

சென்னை:

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையின் முன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. கைது தொடர்பாக குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை என அமலாக்கத்துறையினர் மீது குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.

மேலும் மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News