உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை

Published On 2022-09-08 09:37 GMT   |   Update On 2022-09-08 09:37 GMT
  • தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர்:

மத்திய வங்கக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த மழை கடலூர் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நீடித்தது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அவதிபட்டனர்.

தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News