உள்ளூர் செய்திகள்

கருணாநிதி பற்றி அவதூறு- இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது 2 பிரிவுகளில் வழக்கு

Update: 2022-08-10 07:50 GMT
  • பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார்.
  • இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை கெம்பட்டி காலனியில் இந்து மக்கள் கட்சியின் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கிருக்கும் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள், அக்கட்சியின் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கடந்த 7-ந்தேதி வீடியோ வெளியிட்டனர்.

இது குறித்து பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சரவணன் என்பவர் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது கலகம் உண்டாக்குதல், வதந்தி பரப்புதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News