உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி

Published On 2023-02-16 14:57 IST   |   Update On 2023-02-16 14:57:00 IST
  • ஜஸ்டின் மொய்தீன் என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்து இருப்பது தெரியவந்தது.
  • அதிர்ச்சி அடைந்த மக்கள் ஜஸ்டின் மொய்தீனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தாம்பரம்:

பல்லாவரம் அடுத்த நாகல்கேணி திடீர் நகர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஒரு தம்பதி பம்மல் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக அவர்களது 4 வயது சிறுமியை அருகில் உள்ள உறவினரிடம் விட்டுச் சென்றனர்.

பின்னர் மாலையில் திரும்பி வந்த போது மகள் மாயமாகி இருந்தார். தேடியபோது வீட்டின் அருகே மயக்க நிலையில் மகள் கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியிடம் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின் மொய்தீன் என்பவர் சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு நாள் முழுவதும் பாலியல் தொந்தரவு செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஜஸ்டின் மொய்தீனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜஸ்டின் மொய்தீனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News