உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் சிறைசென்ற வாலிபர் படுகொலை

Published On 2023-06-09 17:00 IST   |   Update On 2023-06-09 17:00:00 IST
  • விசாரணையில் அவரது பட்டறையில் வேலைபார்த்த 2பேர்தான் அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.
  • பகை காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள பெத்தய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அழகுபாண்டி (25). இவர் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலைபார்த்து வந்தார். நேற்றுமாலை முருகபவனம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வந்தார்.

அப்போது அங்கு வந்த 2 பேர் பயங்கர ஆயுதங்களால் அழகுபாண்டியை தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அழகுபாண்டி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன், டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சோதனை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவரது பட்டறையில் வேலைபார்த்த எம்.குரும்பபட்டியை சேர்ந்த 2பேர்தான் அழகுபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.

அழகுபாண்டி ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்றவர். அந்த பகை காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News