உள்ளூர் செய்திகள்
ஒடிசா சென்றுள்ள குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
- அமைச்சர் உதயநிதி தலைமையில் தமிழக குழு ஒடிசாவில் உள்ளது
- தமிழகத்தில் சிகிச்சைக்காக மூன்று மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் ஒடிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள நிலை குறித்து கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.