உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே வங்கி அதிகாரி போல் நகை திருடிய சென்னை வாலிபர் கைது

Published On 2022-08-11 05:02 GMT   |   Update On 2022-08-11 05:02 GMT
  • பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன்.
  • அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.

கோவை:

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் ஜெயக்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இந்த கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் கடையில் இருந்தவர்களிடம் தன்னை வங்கி மேலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பின்னர் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் நகைகள் வாங்க உள்ளேன். நகைகளை எடுத்து காண்பிக்குமாறு கூறினார். பெண் ஊழியரும் நகைகளை ஒவ்வொன்றாக எடுத்து காண்பித்தார்.

இதற்கிடையே அந்த பெண் ஊழியர் கடையில் இருந்த ஜெயக்குமாரின் தாயாரிடம், நான் டீ குடிக்க செல்கிறேன். அதுவரை இவருக்கு நீங்கள் நகையை எடுத்து காண்பிக்குமாறு கூறி சென்றார். அவரும் காண்பித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வாலிபர், மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். அவரும் தண்ணீரை எடுத்து வர உள்ளே சென்றார். அந்த சமயம் பார்த்து வாலிபர் 2 பவுன் நகையை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடையில் இருந்த கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்தது. அதனை வைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கிய அந்த வாலிபரை போலீசார் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த ரவி என்ற சேசிங் ரவி(வயது40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் வேறு எங்காவது இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News