உள்ளூர் செய்திகள்
- மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் பொன்னேரி புதிய தேரடி தெருவில் செல்போன் கடை வைத்து உள்ளார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றார்.
நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.