புதுச்சேரி
null

புதுச்சேரியில் அ.தி.மு.க.வினர் மறியல்- 150 பேர் கைது

Published On 2024-03-08 06:17 GMT   |   Update On 2024-03-08 11:18 GMT
  • புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
  • சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் போதைப் பொருள் ஆசாமிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும்நீதிகேட்டும், போதைப்பொருள் விற்பனை கேந்திரமாக மாறி இளைஞர்கள் வாழ்வை சீரழிக்கப்படுவதை தடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் புதுச்சேரி அ.தி.மு.க.வி.னர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பந்த் போராட்டத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. உப்பளத்தில் உள்ள அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து மாநிலச்செயலர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், அண்ணா சிலையை வந்தடைந்தனர்.

அங்கு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணைச்செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச்செயலர் காந்தி, நகர செயலாளர்கள் அன்பழகன் உடையார், சித்தானந்தம், தொகுதி செயலாளர்கள் சம்பத், துரை, பாஸ்கர், ஆறுமுகம், மகளிர் அணி விமலா, எழிலரசி, மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாலையில் அமர்ந்து கோஷம் போட்டனர். தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News