அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு.
- எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை அ.தி.மு.க. தொண்டர்கள் வழங்கினர்.
மதுரை:
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திடல் அமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, மாநாடு புறப்படுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கு 5.5 அடி உயர வெள்ளிவேலை சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் மற்றும் தொண்டர்கள் வழங்கினர். அ.தி.மு.க. மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாநாட்டு திடலுக்கு நூற்றுக்கணக்கான வாகன அணிவகுப்புடன் புறப்பட்டார்.
திடலை வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.
மக்கள் விரும்பும் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் மதுரை மாநாடு என்பது, சாதனை மாநாடு. எதிர்ப்புகளையும், எதிரிகளையும் வென்றவர் எடப்பாடி பழனிசாமி. நாளை நமதே, இது தான் புரட்சி. - எஸ்.பி.வேலுமணி.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சிறப்பான ஆட்சியை அளித்தவர் ஈ.பி.எஸ். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்- தனபால்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சிறப்பான ஆட்சியை அளித்தவர் ஈ.பி.எஸ்- தனபால்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக சபதம் ஏற்று தீர்மானம்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வலியுறுத்தி தீர்மானம்.
புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.
திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தீர்மானம்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.
தமிழை ஆட்சி மொழியாக்க தீர்மானம்- அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக்கல்வி கொண்டுவர தீர்மானம்.
ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் இழைக்கப்பட்ட அநீதியை மறைப்பதா?- முதல்வரின் பேச்சுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.
தொடர்ந்து, அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு நன்றி. அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு நன்றி. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றுள்ளது- எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் மீது போடப்பட்ட வழக்குகளை சட்ட ரீதியாக வெல்வோம். அதிமுகவில் தொண்டர்கள் கூட முதலமைச்சர் ஆகலாம். கிளை செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக வந்துள்ளேன்- ஈ.பி.எஸ்.