உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
- விபத்தில் தயாளன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் தொரப்பி கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (வயது 24) என்பவர் சென்னை கிண்டியில் உள்ள கூரியர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓட்டுனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னைக்கு செல்ல, மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்தார்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தயாளன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்