உள்ளூர் செய்திகள்

கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க.வினர் சஸ்பெண்டு

Published On 2023-06-29 10:23 IST   |   Update On 2023-06-29 10:23:00 IST
  • ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
  • நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

நத்தம்:

தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.க நிர்வாகிகளான வேலம்பட்டி கந்தசாமி, கொசவபட்டி மரிய ஆரோக்கியம், பூசாரிபட்டி உத்தமன், கண்ணமனூர் கனகராஜ், ராகலாபுரம் சரவணன் ஆகிய 5 பேரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News