உள்ளூர் செய்திகள்

பழனியில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேர் கைது

Published On 2022-09-17 11:59 IST   |   Update On 2022-09-17 11:59:00 IST
  • பாலசமுத்திரத்தைச் சேர்ந்த டிரைவர் சரத்குமார், கூலித் தொழிலாளர்களான கோட்டைமுத்து, மதன் ஆகியோர் பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி மானபங்கம் செய்ய முயன்றனர்.
  • பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பழனி:

பழனி அருகே சின்ன அய்யம்புள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த டிரைவர் சரத்குமார் (வயது 25). கூலித் தொழிலாளர்களான கோட்டைமுத்து (35), மதன் (26) ஆகியோர் அவரிடம் தகாத வார்த்தைகளால் பேசி மானபங்கம் செய்ய முயன்றனர்.

அந்த பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News