உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-06-09 06:48 GMT   |   Update On 2022-06-09 06:48 GMT
மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் ரவுடிகள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி தனியார் திருமண மண்டபத்தில் பட்டா கத்தியுடன் தங்கியிருந்த 5 பேரை மணவாளநகர் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர், ஜோசப் என்ற தேவகுமார் (35), புட்லூர் பகுதியை சேர்ந்த மோகன்பிரபு (23), மப்பேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு, புது இருளஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அவினாசி (19), நயப்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இந்த 5 பேரையும் மணவாளநகர் போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ரவுடிகள் மணிகண்டன் தேவகுமார் ஆகிய இருவரும் பல்வேறு வழக்குகளில் ஏற்கனவே சிறை சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் ரவுடிகள் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ரவுடிகள் மணிகண்டன், தேவகுமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை மணவாளநகர் போலீசார் புழல் சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கனார்.

Tags:    

Similar News