உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்- பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-12-25 15:01 IST   |   Update On 2022-12-25 15:01:00 IST
  • ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் என்கிற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரிந்தது.
  • விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

போரூர்:

விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2-வது தளத்தில் உள்ள வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் அழகிகளுடன் விபசாரத்தில் ஈடுபட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவன அலுவலகம் என்கிற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து திருநெல்வேலியை சேர்ந்த கல்யாண் குமார் (45) திருவொற்றியூரை சேர்ந்த மேரி (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

Tags:    

Similar News