உள்ளூர் செய்திகள்
ெதரு நாய்கள் கடித்து இறந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

அந்தியூர் அருகே தெரு நாய்கள் கடித்து 14 ஆடுகள்- கன்று குட்டி பலி: விவசாயிகள் அச்சம்

Published On 2022-08-04 10:52 IST   |   Update On 2022-08-04 10:52:00 IST
  • கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
  • மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார்.

இந்த நிலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.

மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், வீடுகளில் ஆடுகள் வளர்ப்போரும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் இடம் தெரிவித்தனர். மேலும் பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சியில் தெரு நாய் பிடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஒரு நாய் பிடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் அந்த நாய்களை பிடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனையோடும் அச்சத்தோடும் உள்ளனர்.

Tags:    

Similar News