உள்ளூர் செய்திகள்

பரமன்குறிச்சியில் நடந்த முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த காட்சி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2023-07-28 14:23 IST   |   Update On 2023-07-28 14:32:00 IST
  • உடன்குடி பேரூராட்சி மண்டபம், பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கலையரங்கம் ஆகியவற்றில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பதிவு செய்த பெண்களிடம் விண்ணப்பம் பெற்று பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யப்படும் முகாம் நடைபெற்று வருகிறது.
  • இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்கின்றனர் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

உடன்குடி:

உடன்குடி பேரூராட்சி மண்டபம், பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கலையரங்கம் ஆகியவற்றில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பவுதி செய்த பெண்களிடம் விண்ணப்பம் பெற்று பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யப்படும் முகாம் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இம்முகாம்களை தமிழக மீன்வளம், மீனவளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விண்ணப்பிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்யப்படுவதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகள், தன்னார்வலர்களிடம் அமைச்சர் வலியுறுத்தினார். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டில் நடைபெறும் இத்திட்டம் பெண்களின் வாழ்வில் மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்த தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடவடிக்கையால் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் தமிழ்நாட்டை திரும்பி பார்க்கின்றனர், தமிழ்நாடு இன்று அனைத்து மாநிலத்திற்கும் முன்னாடி மாநிலமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

அப்போது மாவட்ட ஊராட்சி தலைவி பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவரும், நகரச் செயலாளருமான மால்ராஜேஷ், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர் அஸ்ஸாப் அலி, பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் முகமது சலீம், அன்வர் சலீம், மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபர், சிராஜூதீன், முபாரக், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, ஓன்றிய பொருளாளர் பாலகணேசன், ஓன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News