உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதா,தமிழக அரசு ( கோப்பு படம்)

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பரிந்துரைபடி நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு

Published On 2022-10-18 11:32 GMT   |   Update On 2022-10-19 06:51 GMT
  • வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
  • சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News