உள்ளூர் செய்திகள்
புயல் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலம், சாலைகள் கணக்கெடுப்பு- ரங்கசாமி
- புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
- மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுச்சேரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். 1971-ல் 31 செ.மீ. மழை அதிகமாக பதிவாகியிருந்தது. தற்போது 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். புதுச்சேரியில் விளைநிலங்கள், வீடுகளின் சாலைகள் உள்பட அனைத்து பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மத்திய அரசின் உதவி கோரப்படும்.
புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்கப்படும். அனைத்து துறைகளும் கள பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.