கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசினார்.
- உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
- குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசிய விபரங்கள் வருமாறு:-
முத்துலட்சுமி (அ.தி.மு.க):
கொளப்பாடு ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாரப்பட்டு மணல்களை டிராக்டர்களில் ஏற்றி செல்லும் போது சாலைகளில் கொட்டுவதால் பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
அதனை சரி செய்ய வேண்டும்.
ரம்யா (அ.தி.மு.க.): பண்ணத்தெரு ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.
செல்வி சேவியர் (தி.மு.க.):
நீர்முளை ஊராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.
மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்):
தலைஞாயிறு பகுதிக்கு காவிரிநீர் வராததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
தீபா (அ.தி.மு.க.):
அவரிக்காடு ஊராட்சியில் மயான சாலைக்கு செல்லும் வழியில் ஆற்றில் உள்ள மரப்பாலத்தை அகற்றி கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்.
மாசிலாமணி (தி.மு.க.):
வானவன்மகாதேவி பகுதியில் பிலாற்றங்கரை செல்லும் சாலையை செப்பணிட வேண்டும்.
உதயகுமார் (தி.மு.க.):
நாலுவேதபதி பகுதியில் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும்.
இதற்கு பதிலளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசுகையில்:-
உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதிநி லைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
முடிவில் அலுவலக மேலாளர் மகேஷ் நன்றி கூறினார்.