உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தில் உள்ள நெல்லை திருப்பதி பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

நெல்லையில் இருந்து நவதிருப்பதி தலங்களுக்கு சிறப்பு பஸ்கள்- கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-09-30 14:34 IST   |   Update On 2023-09-30 14:34:00 IST
  • இன்று பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
  • சிறப்பு பஸ்கள் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

நெல்லை:

புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

நெல்லை மாவட்டத்திலும் இந்த ஆண்டு புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்க ளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படு கிறது.

அதன்படி கடந்த வாரம் புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களுக்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதன்படி 2-வது வாரமான இன்று காலையும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த பஸ்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி காணப்பட்டது. இந்த ஆன்மிக பயணத்திற்கு கட்டண தொகை யாக ரூ.500 வசூலிக்கப்பட்டது.

இந்த சிறப்பு பஸ்கள் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களுக்கும் சென்றது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் மீண்டும் இரவு புதிய பஸ் நிலையம் வந்து சேர்கிறது. இதேபோல் வருகிற 7-ந்தேதி, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இனிவரும் வாரங்களில் செல்வதற்கு விருப்பமுள்ளவர்கள் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதபோல் இன்று பேட்டையை அடுத்துள்ள திருவேங்கடநாதபுரம் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், அருகன்குளம் எட்டெ ழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில், அத்தாளநல்லூர் பெருமாள் கோவில், பாளை ராஜகோபால சுவாமி, தச்சநல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில், தள வாய்புரம் பெருமாள் கோவில், வரம்தரும் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், கருட சேவை நடக்கிறது.

Tags:    

Similar News