பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்.
வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற பெற்றோர்களுக்கு கடிதம் எழுதிய மாணவர்கள்
- வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற பெற்றோர்களுக்கு மாணவர்கள் கடிதம் எழுதினர்.
- இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
மானாமதுரை
வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி மன்கிபாத் உரையில் நாடு முழுவதும் வீடுகள் தோறும் வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதனை தமிழக அரசு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.இந்த விசயத்தை மாணவர்கள் மூலமாக பெற்றோருக்கு கொண்டு செல்ல கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளி செயலாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து கடிதம் எழுதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
அதன்படி மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் அட்டை இலவசமாக வழங்க பட்டது. மாணவர்கள் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை தெரிவித்து வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்களும் நமது வீட்டில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். பின்னர் அதில் பெற்றோர் முகவரி எழுதி அஞ்சல் நிலையத்தில் கொடுத்தனர்.
மாணவர்களிடையே கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.