உள்ளூர் செய்திகள்

மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி

Published On 2022-10-27 08:14 GMT   |   Update On 2022-10-27 08:14 GMT
  • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
  • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

காளையார்கோவில்

மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News