உள்ளூர் செய்திகள்

கோட்டையூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் கார்த்திக் சோலை தலைமையில் நடந்தது.

கோட்டையூரில் பேரூராட்சி கூட்டம்

Published On 2022-09-28 13:52 IST   |   Update On 2022-09-28 13:52:00 IST
  • கோட்டையூரில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
  • அனைத்து வசதிகள உள்ள வார்டு அது. உறுப்பினரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றார்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் கார்த்திக் சோலை தலைமையில் நடந்தது.

துணை தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கவிதா வரவேற்றார். 2-வது வார்டு உறுப்பினர் ராஜா (விடுதலை சிறுத்தைகள் கட்சி) தனது வார்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.

தலைவர் கார்த்திக் சோலை பேசுகையில், அமைச்சர் பெரியகருப்பன் 4-வது முறையாக வெற்றி பெற்ற திருப்பத்தூர் தொகுதியை சேர்ந்த கோட்டையூர் 2-வது வார்டு அம்பேத்கர் நகர், காந்திநகர் பகுதியில் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், தற்போது அமைச்சரான பின்னரும் பல்வேறு நலத்திட்டஙகளை செய்துள்ளார்.

எம்.எல்.ஏ. நிதி மற்றும் பேரூராட்சி நிதிகளில் இருந்து அங்கு 3 கலையரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.போர்வெல் அமைக்கப்பட்டு 7 சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டுள்ளது.சமுதாயக் கூடம், அங்கன்வாடிகள் உள்ளன.துணி துவைக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சியில் வேறு வார்டுகளில் இல்லாத உயர் கோபுர ஹைமாஸ் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை உள்ளது. 25-க்கும் மேற்பட்ட பொது குடிநீர் குழாய்கள் உள்ளன.தெருவிளக்குகள் 100 சதவீதம் உள்ளன.

அனைத்து பகுதிகளிலும் சிமெண்டு மற்றும் தார் சாலைகள் போடப்பட்டுள்ளன.ஒரே ஒரு சாலை மட்டும் குறுகலாக உள்ளதால் பேவர் பிளாக் சாலை 150 மீட்டர் தூரம் மட்டுமே அமைக்க வேண்டி உள்ளது. அனைத்து வசதிகள உள்ள வார்டு அது. உறுப்பினரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றார்.

கூட்டத்தில் பல்வேறு உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிதிநிலைமை அடிப்ப டையில் நிறைவேற்றப்படும் என்றும் தலைவர் கூறினார். இதில் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News