உள்ளூர் செய்திகள்

கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-03 06:44 GMT   |   Update On 2023-02-03 06:44 GMT
  • காரைக்குடி அருகே 126 ஆண்டுகளுக்கு பிறகு கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயல் அருகில் உள்ள சின்ன வேங்காவயல் மற்றும் வலயன்வயலில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. கடைசியாக 1897ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 126 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகத்திற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கண்டனூர் வேங்காவயலார் வீடு அழகப்ப செட்டியார் குடும்பத்தார் மற்றும் மணிகண்டன் செட்டியாரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் சிறப்புபூைஜகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News