உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
- சிவகங்கையில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இதில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.