உள்ளூர் செய்திகள்

மாட்டுவண்டி பந்தயம் நடந்த போது எடுத்த படம்.

இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

Published On 2023-05-11 13:22 IST   |   Update On 2023-05-11 13:22:00 IST
  • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
  • கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மனின் கோவில் 89 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்த யத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி களுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது.

சீறி பாய்ந்து சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றன. அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று ஆரவாரத்துடன் போட்டி யை கண்டு ரசித்தனர்.

நடுமாடு பிரிவில் இலங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி 2-வது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

பூஞ்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், கனகவள்ளி 2-வது பரிசும், பூண்டி கேசவன் 3-வது பரிசும் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொ ண்டன. இதில் அவனி யாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமை யாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News