உள்ளூர் செய்திகள்

தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-08-02 08:43 GMT   |   Update On 2022-08-02 08:43 GMT
  • சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொ ள்ள வேண்டிய முன்னெ ச்சாரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

இதில் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பருவமழை காலத்தின் போது நீர்நிலைகளில் சிறிது உடைப்பு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக சரி செய்திட வேண்டும். பொதுமக்கள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக அந்த இடத்திலிருந்து மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்தி ற்கும் முதல்நிலை மீட்பாள ர்களாக குறைந்தது 5 தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்க ளின் பட்டியலை வைத்திருக்க வேண்டும். மண்சுவர் வீடுகளில் தங்கியிருப்பவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும். நீர்வள ஆதார அமைப்பினர் நீர் செல்லும் பாதைகளுக்கு மேல் சாலை அமைத்திருந்தால் பாலங்களில் அடைப்பு இல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளில் கரைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டறியப்படும் கண்மா ய்களில் மணல் மூட்டைகள், சவுக்கு மூட்டைகளை தேவையான அளவிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

சாலையில் சேதம் ஏற்படும் பட்சத்தில் அவற்றிற்கு மாற்று வழி செய்திட ஜே.சி.பி., மின்அறுவை எந்திரங்கள், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அலுவலர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பொதுமக்கள் தென்மேற்கு பருவமழையி னால் பாதிப்பு அடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்புகுளோரியா, தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News