உள்ளூர் செய்திகள்

வாராப்பூர் கட்டிட பொறியாளர் நாகராஜனுக்கு சிறந்த விவசாயிக்கான சான்றிதழை கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

சிறந்த விவசாயிக்கான சான்றிதழ்

Published On 2022-07-05 13:37 IST   |   Update On 2022-07-05 13:37:00 IST
  • சிறந்த விவசாயிக்கான சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
  • இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பொறியாளர் வி.என்.ஆர். நாகராஜன். இவர் தான் பணியாற்றும் கட்டிட பொறியாளர் பணியோடு விவசாயத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவராக திகழ்ந்து வந்துள்ளார்.

இவரின் முயற்சியை பாராட்டும் வகையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிறுகள் பயிரிடுவதில் சிறந்து விளங்கிய விவசாயி என்ற அடிப்படையிலும், தரிசு நிலங்களை விவசாய பூமியாக மாற்றியமைத்தற்காகவும் மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி நாகராஜனுக்கு நற்சான்றிதழையும், பணமுடிப்பையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இதனை அறிந்த வாராப்பூர் ஊராட்சி கிராம மக்கள், பொன்னமராவதி பகுதியை சேர்ந்த வணிகர்கள், லயன்ஸ் கிளப் சங்கத்தினர் நாகராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News