உள்ளூர் செய்திகள்

எஸ். புதூர் யூனியனுக்கு உட்பட்ட மின்னமலைப்பட்டி ஊராட்சி, திருவாழந்தூர் தொடக்க பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

Published On 2022-09-11 08:13 GMT   |   Update On 2022-09-11 08:13 GMT
  • முதல்கட்டமாக 54 பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து கலெக்டர் தெரிவித்தார்.
  • 7 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 839 மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக காரைக்குடி நகராட்சி மற்றும் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதன்முதலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக நியமித்துள்ள குழு மற்றும் சம்பந்த ப்பட்ட ஊராட்சி மன்றத்த லைவர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, உறுப்பினர்கள், பஞ்சாயத்து கூட்டமைப்பு, தலைமையாசி

ரியர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சிகளில் உள்ள 47 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 2 ஆயிரத்து 812 மாணவர்களும், காரைக்குடி நகராட்சியில் உள்ள 7 தொடக்கப்பள்ளிகளில் படித்து வரும் 839 மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் வானதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, அங்கயற்கண்ணி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News